பட்டுக்கோட்டைஇ ஏனாதி இராஜப்பா அவர்களின் 45-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 28.02.2022 அன்று மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்முகாமினை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க உதவியுடன் ஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரிஇ மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைஇ மற்றும் கோட்டை ரோட்டரி சங்கம்இ பட்டுக்கோட்டை ஆகியோர் இணைந்து நடத்தினர். முகாமில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண் நோயை கண்டறிந்து சிகிச்சைப் பெற்றனர். இதில்; 110 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தகுதிபெற்று அறுவை சிகிச்சைக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள்; கலந்து கொண்ட இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 130 யூனிட் இரத்தம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. முகாமில் பாரதிதாசன் பல்கலைக்கழக லுசுஊ மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேல்இ தஞ்சை மாவட்ட லுசுஊ அமைப்பாளர் பேரா. முருகானந்தம் மற்றும் மருத்துவர் ராதிகா மைக்கேல் கலந்து கொண்டனர். முகாமினை கல்லூரிச் செயலர் தலைமையேற்க ரோட்டரி சங்க தலைவர் சுரேஷ் துவக்கி வைத்தார். நிறைவாக ரோட்டரி சங்க செயலர் ரெஜினால்டு செல்வகுமார் நன்றி கூறினார். முகாமி;ற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்களும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் செய்து கொடுத்தனர்.