பட்டுக்கோட்டை, ஏனாதி இராஜப்பா கல்லூரியில் உலக மகளிர் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவினை கல்லூரியின் முதல்வர் முனைவர் வை. விஜயலட்சுமி தலைமை ஏற்று மாணவிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அவர் தனது வாழ்த்துரையில் பெண்மையை போற்றுவோம் என்ற தலைப்பில் வாழ்த்துரை வழங்கினார் வாழ்த்திரையில் கல்லூரியின் செயலர் ரோட்டாரின் பொ. கணேசன் மாணவிகளுக்கு மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார் அவர் தனது வாழ்த்துரையில் நீ ஒதுக்கப்படும் இடங்களில் நிமிர்ந்து நில் , நீ விமர்சிக்கப்படும் இடங்களில் மௌனமாய் இரு நீ நேசிக்கப்படும் இடங்களில் அன்புடன் இரு உலகம் உன் வசப்படும், என்று வாழ்த்தினார்.

சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக் காவலர் திருமதி A. கலைச்செல்வி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் பெண்கள் எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.

மேலும் பெண்களின் எதையும் எதிர் கொள்ளும் மனோபாவதத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள் எப்பொழுதும் மனா தைரியத்துடன் செயல்பட வேண்டும். மேலும் மகளிர் பாதுகாப்பிற்கான தமிழக அரசின் காவலன் மென்பொருள் பயன்பாடு குறித்து விளக்கினார்.

தலைமைக் காவலர் திருமதி D. சரளாதேவி அவர்கள் தனது சிறப்புரையில் பெண்மையே அழகு என்று பெண்ணின் பெருமை பற்றி பேசினார்.

விழாவில் வருகை தந்த அனைவரையும் பேராசிரியர்.திருமதி. நித்யா வரவேற்றார். பேராசிரியர். ரா. சுபா நன்றி கூறினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் செய்து கொடுத்தனர்.